வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் குறித்த டுவிட் : பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்கு பதிவு
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை குறித்து மோசமாக டுவிட் செய்ததாக கூறி, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மீது கர்நாடகாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை குறித்து வதந்திகளையும், தவறான தகவல்களையும் பலர் பரப்பியதால் வன்முறைகள் வெடித்தது போன்று, இப்போது வேளாண் சட்டங்களை குறித்தும் தவறாக பேசி நாட்டில் அச்சத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக கங்கனா டுவிட் செய்தார்.
இது குறித்து வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், கங்கனா மீது வழக்கு பதிய காவல்துறைக்கு துமாகூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Comments