கொரோனா பரவலை தடுக்க இங்கிலாந்தில் மூன்றடுக்கு கட்டுப்பாடுகள் அமல்
கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து,இங்கிலாந்தில் 3 அடுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாதிப்பு மிக, மிக அதிகமாக உள்ள லிவர்பூல் நகர மண்டலத்தில் மக்கள் ஒன்றுகூடும் எவ்வித நிகழ்வும் அனுமதிக்கப்படாது. மதுபான விடுதி, கேளிக்கை விடுதிகள் முற்றிலுமாக மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிப்பு அதிகம் உள்ள மான்செஸ்டர், போல்டன், நாட்டிங்ஹாம், லங்காஷயர், மேற்கு யார்க்சயர், லீட்ஸ், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ், பர்மிங்காம், நாட்டிங்ஹாம்சயர் ஆகிய ஊர்களில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஒன்று கூட அங்கு அனுமதி இல்லை. இது தவிர நாட்டின் இதர ஊர்களில் பார்கள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் இரவு 10 மணிக்கு மேல் திறந்திருக்க கூடாது. இறுதிச் சடங்கு, திருமணம் போன்றவை தவிர 6 பேருக்கு மேற்பட்டோர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments