மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு பரிந்துரை அமலான பிறகே, நீட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்

0 1388
மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு பரிந்துரை அமலான பிறகே, நீட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்

மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவின் பரிந்துரையை அமல்படுத்திய பிறகே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ள சூழலில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் இது தொடர்பாக முறையீடு செய்யப்பட்டது.

அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்த நிலையில் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், ஏழரை சதவீத உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றி ஆளுநரின் இசைவுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments