பீகார் மாநிலத்தில் பா.ஜ.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு - கருத்துக் கணிப்பில் தகவல்
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட அந்த மாநில சட்டமன்ற தேர்தலில், வெற்றி வாய்ப்பு எந்த கூட்டணிக்கு என்று டைம்ஸ்நவ் மற்றும் சிவோட்டர்ஸ் ஆகியவை இணைந்து கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை மொத்தமுள்ள 243 தொகுதிகளில் கருத்துக்கணிப்பு நடத்தியது.
இந்த கருத்துக்கணிப்பு முடிவில், சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி 76 தொகுதியில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்ஜனசக்தி கட்சிக்கும் 5 இடங்கள் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Comments