யானை மீது யோகா பயிற்சி; தவறி கீழே விழுந்த பாபா ராம்தேவ் - வைரலாகும் வீடியோ

0 262296
யானை மீது ஏறி அமர்ந்து யோகாசன பயிற்சி அளித்த பாபா ராம்தேவ் கீழே விழும் காட்சிப்பதிவு வைரலாகிறது

யானை மீது ஏறி, யோகா செய்த சாமியார் பாபா ராம்தேவ், தவறி கீழே விழுந்த வீடியோ பதிவு, வைரலாகி வருகிறது.

மதுராவில் உள்ள குரு ஷார்தானந்தா ஆசிரமத்தில், அலங்கரிப்பட்ட யானை மீது அமர்ந்து, தனது சீடர்களுக்கு, மூச்சுப் பயிற்சியான, பிராணயாமம் செய்து காண்பித்தார்.

அப்போது, திடீரென அசையத் தொடங்கிய அந்த யானை, ஒரு கட்டத்தில், நகர முயன்றது.

அப்போது, யானை மீது அமர்ந்திருந்த பாபா ராம்தேவ், கீழே, தவறி விழுந்தார்.

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த பாபா ராம்தேவ், ஓர் வளைவில் நிலைதடுமாறி கீழே விழுந்த காட்சிகள் வைரலானது நினைவுகூறத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments