தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

0 2497
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கும், 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கும், 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன் கூறுகையில், காக்கிநாடா அருகே காலை 7 மணி அளவில் கரையை கடந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடலோர ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது என்றார். இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடுமென அவர் கூறினார். 

சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடலில் சூறாவளிக் காற்று வீசுவதால் அடுத்த இரு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று புவியரசன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments