சீனா, பாகிஸ்தானை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள தயார் நிலையில் இந்திய பாதுகாப்பு படைகள்...

0 3977
எல்லையில் தொல்லை தரும் பாகிஸ்தான் மற்றும் சீனாவை எதிர்கொள்ள இந்திய ராணுவம் புதிய திட்டத்தை தீட்டி உள்ளது. இதற்காக இரு நாடுகளை ஒட்டிய எல்லையில் சக்தி வாய்ந்த பீரங்கி படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

எல்லையில் தொல்லை தரும் பாகிஸ்தான் மற்றும் சீனாவை எதிர்கொள்ள இந்திய ராணுவம் புதிய திட்டத்தை தீட்டி உள்ளது. இதற்காக இரு நாடுகளை ஒட்டிய எல்லையில் சக்தி வாய்ந்த பீரங்கி படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

லடாக் எல்லையில் சீனாவும், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு தொல்லை தரும் விதத்தில் நடந்து கொள்கின்றன. இதனால் இரு நாடுகளையும் ஒரே சேர எதிர்கொள்ள இந்திய ராணுவமும் , விமானப்படையும் முழு வீச்சில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் லடாக் எல்லைக்கு பீஷ்மா பீரங்கிகளை இந்திய ராணுவம் அனுப்பி உள்ளது.

48 டன் எடையும், 31 அடி நீளமும், 12.5 அடி அகலமும், 7 அடி உயரமும் கொண்ட பீஷ்மா பீரங்கிகள் இப்போது லடாக் எல்லையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து 43 முறை சுடும் திறன் கொண்ட பெரிய பீரங்கி, ஆற்றல் மிக்க எந்திர துப்பாக்கி, புகை குண்டுகளை வீசும் துப்பாக்கி, இரவிலும் துல்லியமாக குறி பார்த்து இலக்கை தாக்கும் வசதி, எதிரிகளின் குண்டுகளால் துளைக்க முடியாத கவசம் என பல்வேறு நவீன வசதிகளை கொண்டது பீஷ்மா.

மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து 550 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில்லாமல் ஓடும் ஆற்றல் கொண்ட பீஷ்மாவுக்கு இணையான பீரங்கி சீனாவிடம் இல்லை . இதே நேரத்தில் எல்லையில் சீனா நிறுத்தி வைத்துள்ள டி 63 , டி 99 ரக பீரங்கிகள் இலகு ரகத்தை சேர்ந்தவை என்றும், அவை பீஷ்மாவின் சக்திக்கு இணையாகாது என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆற்றல் மிக்க பீஷ்மா பீரங்கி படைகள் மூலம் சீனாவுக்கு எதிராக ராணுவம் வியூகம் வகுத்துள்ளது. இதே நேரத்தில் பாகிஸ்தானை புறமுதுகு காட்ட இந்திய விமானப்படை, ரபேல் விமானங்களை களம் இறக்க தயார் நிலையில் உள்ளது.

ரபேலுக்கு இணையான போர் விமானம் எதுவும் இல்லாத பாகிஸ்தானுக்கு, இப்போதே அச்சம் ஆட்டுகிறது. இதனால் தான் பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வா, ரபேல் விமானங்களை இந்தியா பயன்படுத்தினால் போரின் நிலை மாறும் என்றும், அந்நாட்டு விமானப்படை தளபதி அன்வர் கான் ரபேல் விமானங்கள் மூலம் இந்தியா தாக்கும் அபாயம் உள்ளது என்றும் கூறியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments