சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணு அனுமதி

0 2418

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, சென்னையிலிருந்து இன்று காலை, சேலத்திற்கு அவர் காரில் சென்றார். விழுப்புரம் அருகே சென்றபோது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உடல்நலம் குன்றியதால், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் அழைத்து வரப்பட்டார். அங்கு, அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments