மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னிரிமை இல்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை
10-வது முடித்ததற்காக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளார் பணியில் நியமிக்க முடியுமா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதில்லை என்ற வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விளையாட்டுத்துறையில் 90-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் வென்ற மனுதாரருக்கு 10-வது முடித்ததற்காக அலுவலக உதவியாளர் பணி வழங்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 10-வது படித்திருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தமிழகத்தில் அரசியல் ஸ்டார், சினிமா ஸ்டார், கிரிக்கெட் ஸ்டார் என மூன்று ஸ்டார்களுக்கு மட்டுமே மதிப்பு இருப்பதாகவும் கருத்து கூறினர்.
Comments