செல்போனில் அதிக நேரம் செலவழிப்பு, பெற்றோர் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தோழிகளுடன் அதிக நேரம் செல்போனில் பேசிய 10ஆம் வகுப்பு மாணவி, பெற்றோர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வில்பட்டியை சேர்ந்த லோகநாதனின் மகள் தனுஷியா, 10ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், ஆன்லைன் வகுப்பு பாடங்கள் குறித்து தனுஷியா தனது தோழிகளுடன் செல்போனில் அதிக நேரம் பேசியதாகவும் ஆனால் அவர், வெட்டியாக அரட்டை அடித்ததாக நினைத்து, பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் தனுஷியா நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Comments