ஹைடெக் வகுப்பறையுடைய அரசு பள்ளிகளைக் கொண்ட முதல் மாநிலமாக உருவெடுத்த கேரளா
மடிக் கணினிகள், புராஜெக்டர்கள், வெப்கேமராக்கள், அதிநவீன ஆய்வுக் கூடங்கள் உள்ளிட்ட ஹைடெக் வகுப்பறையுடைய அரசு பள்ளிகளைக் கொண்ட முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்திருப்பதாக அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் ஹைடெக் வகுப்பறையை ஏற்படுத்தும் திட்டத்தை மாநில உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை செயல்படுத்தியது.
இதையடுத்து 8 முதல் 12 வரையிலான வகுப்புகளை கொண்ட 4,752 பள்ளிகளில் 45 ஆயிரம் வகுப்பறைகள் ஹைடெக் வகுப்பறைகளாக உருவாக்கப்பட்டன.
இதையடுத்து 1 முதல் 7 வரை வகுப்புகளை கொண்ட 11,275 பள்ளிகளில் ஹை-டெக் ஆய்வு கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
Comments