மகாராஷ்டிராவில் வழிபாட்டுதலங்களை திறக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் இடையே மோதல்போக்கு அதிகரிப்பு
மகாராஷ்டிராவில் மத வழிபாட்டு தலங்களை திறக்கும் விவகாரத்தில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கும், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கும் இடையேயான மோதல்போக்கு அதிகரித்துள்ளது.
நேற்று உத்தவ் தாக்கரேவுக்கு அனுப்பிய கடித த்தில், இன்னும் மாநிலத்தில் கோவில்கள் திறக்கப்படாத நிலையில், நீங்கள் திடீரென மதசார்பற்றவராக மாறிவிட்டீர்களா என ஆளுநர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு உத்தவ் தாக்கரே, கோவில்களை திறந்தால்தான் இந்துத்துவா, திறக்கவில்லை என்றால் இந்துத்துவா இல்லையா என்ற பதில் கேள்வியை ஆளுநருக்கு எழுப்பி உள்ளார். கொரோனா காலகட்டத்தில் மக்களின் பாதுகாப்பே தமது அரசின் முன்னுரிமை எனவும் அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Is Governor not a citizen, not a Hindu? He has the right to speak on all issues. Does he not have the right to question? What issue do they have with reopening of temples? Will Congress-NCP withdraw their support if you reopen temples?: Maharashtra BJP president Chandrakant Patil https://t.co/0nft7zfxaE pic.twitter.com/iZsn35eglK
— ANI (@ANI) October 13, 2020
Comments