ககன்யான் திட்டத்தில் சிறிய கால தாமதம் ஏற்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
கொரோனா காரணமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் சிறிய கால தாமதம் ஏற்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஏற்கனவே திட்டமிட்டபடி,2022 ஆகஸ்டில் திட்டத்தை துவக்க இயலாது என்றாலும் அதிக தாமதமின்றி திட்டத்தை முன்னெடுக்க விண்வெளி ஆய்வில் முன்னணியில் உள்ள நாடுகளின் உதவியை பெற முயற்சிக்கப்படும் என்றார்.
ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ள இந்திய வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி தொடர்வதாக குறிப்பிட்ட அவர், முக்கிய மருத்துவ தொழில்நுட்ப உதவியை பிரான்சு வழங்கும் என்றார்.
Comments