மலைப்பகுதிகளில் இ-பாஸ்: மத்திய அரசிடம் 3 நாட்களில் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவு
மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறைகளை தொடர்வது குறித்து மத்திய அரசிடம் 3 நாட்களில் விளக்கம் பெற்று, விரிவாக ஊடகங்களில் விளம்பரப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை வாழிடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மலைப்பகுதிகளில் மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் என்பதால், இ-பாஸ் நடைமுறை என்றும், மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு, இ-ரிஜிஸ்டர் முறையை அமல்படுத்த ஆலோசித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Comments