ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு, இளம்பெண் தாயாரை சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று சிபிஐ விசாரணை

0 1007
உத்தர பிரதேசம் ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில், உயிரிழந்த இளம்பெண்ணின் தாயாரை சம்பவ இடத்துக்கு சிபிஐ அழைத்து சென்று விசாரணை நடத்தியது.

உத்தர பிரதேசம் ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில், உயிரிழந்த இளம்பெண்ணின் தாயாரை சம்பவ இடத்துக்கு சிபிஐ அழைத்து சென்று விசாரணை நடத்தியது.

அங்கு தலித் சமூக இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக சிபிஐ கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து இளம்பெண்ணின் சொந்த கிராமத்துக்கு சிபிஐ அதிகாரிகள் குழு இன்று பிற்பகல் சென்றது.

உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய தாயாரையும், இளம்பெண்ணின் சகோதரரையும் சம்பவ பகுதிக்கு அழைத்து சென்று நடந்தது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments