'பொங்கலுக்கு இலவச பொருள்களுடன் மண் பானையும் வழங்க வேண்டும்!' - அரசுக்கு தொழிலாளர்கள் உருக்கமான வேண்டுகோள்

0 3389

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச பொருள்களுடன், மண்பானை மற்றும் மண் அடுப்பு ஆகியவற்றையும் வழங்க நடவடிக்கை எடுத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று மண்பாண்ட உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் அரங்கேத்தி, மாவட்ட செயலாளர் வேலு, பொருளாளர் செல்வராஜ், வழக்கறிஞர் அன்பரசன் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20,000 மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகிறோம். களிமண்ணை மூலதனமாக வைத்து தொழில் செய்கிறோம். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு கஷ்டஜீவனத்தில் வாழ்கிறோம். மண்பானை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப் புரிந்து அனைவரும் மண்பானைகளைப் பயன்படுத்த முன் வரவேண்டும். மண்பாண்ட தொழில் அழிந்து வருவதால் குறைந்த வருவாய் கிடைப்பதால், மண்பாண்டத் தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், மண்பாண்ட தொழில் அழிந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். மண்பாண்ட தொழில் அழியாமல் காக்க மற்ற மாவட்டங்களில் உள்ளதுபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழில் பழகுவதற்கு நவீன தொழிற்பயிற்சி கூடம் கதர் கிராம தொழில் வாரியம் மூலம் அமைக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மண் பாண்ட உற்பத்தியாளர்கள், ''பொங்கல் தினத்தன்று பொங்கல் வைக்கத் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கும் அரிசி, வெல்லம், முந்திரி திராட்சை, கரும்பு போன்ற பொருள்களோடு, மண் பானை மற்றும் மண் அடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments