மத்திய பிரதேசத்தில் விபத்து ஏற்படுத்தியதற்காக ஆட்டோ ஓட்டுநரை தகரத்தால் சரமாரியாக தாக்கிய நபர்கள்

0 1275
மத்திய பிரதேசத்தில் விபத்து ஏற்படுத்தியதற்காக ஆட்டோ ஓட்டுநரை தகரத்தால் சரமாரியாக தாக்கிய நபர்கள்

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் விபத்து ஏற்படுத்தியதற்காக ஆட்டோ டிரைவரை இரண்டு பேர் சேர்ந்து தகரத்தால் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதர்டல் பகுதியில் பைக் மீது ஆட்டோ இடித்து விபத்து ஏற்பட்டது.

இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்களும் லேசான காயமடைந்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண்களின் உறவினர் 2 பேர், சம்பவ இடத்திற்கு வந்து ஆட்டோ ஓட்டுநரை தாக்கினர்.

இந்த வீடியோ வைரலான நிலையில், தாக்குதல் நடத்திய 2 பேர் மீது வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments