கோவில் சொத்துக்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?...அரசு மற்றும் அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
கோவில் சொத்துக்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு மற்றும் அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் சங்கர ராமேஸ்வரர், வைகுண்டபதி கோவில் சொத்துகளை மீட்கக் கோரிய மனு, விசாரணைக்கு வந்தது.
அரசின் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, கோவில் சொத்துகளின் அளவு முதலில் 5.25 லட்சம் ஏக்கர் என்று கூறியதாகவும், பின்னர் 4.75 லட்சம் ஏக்கர் என்று சுருங்கி விட்டதாகவும் மனுதாரர் கூறினார்.
அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்கள், அவற்றிற்குரிய சொத்துக்களின் நிலை, குத்தகை அல்லது வாடகை வசூலிக்கப்படுகிறதா? ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி கோவில் சொத்துக்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என வினவிய நீதிபதிகள், அறநிலையத் துறை ஆணையர், வருவாய்த் துறை செயலர், வரும் 16ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
Comments