மேல்சிகிச்சைக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் அமைச்சர் துரைக்கண்ணு

0 4897
மேல்சிகிச்சைக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் அமைச்சர் துரைக்கண்ணு

சென்னையில் இருந்து சேலம் செல்லும் வழியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார்.

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்னையில் இருந்து காரில் சேலம் சென்ற வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு வழியிலேயே திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அதையடுத்து, அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அமைச்சர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments