2021ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா மருந்து? - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன்

0 1560
2021ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா மருந்து? - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன்

2021ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில்  கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போதைய நிலையில் 4 மருந்துகள், கொரோனா தடுப்பு சிகிச்சைக்கு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் (meeting of the Group of Ministers) பேசிய ஹர்ஷவர்த்தன், இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்திலிருந்து கொரோனா மருந்து கண்டுபிடிக்கப்பட்டு  இருக்கும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.

அந்த மருந்தை நாடு முழுமைக்கும் எப்படி விநியோகிப்பது, யாருக்கு முதலில் அதை அளிப்பது என்பது குறித்த திட்டத்தை உருவாக்கும் பணியை நிபுணர்கள் குழு ஏற்கெனவே தொடங்கி விட்டதாகவும் ஹர்ஷவர்த்தன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments