பாஜகவில் இணைய போவதாக வெளியாகி வரும் தகவலுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் மறுப்பு
பாஜகவில் இணைய போவதாக சமூக இணையதளங்களில் வதந்தி பரவி வருவதாக நடிகர் விஜய்யின் தந்தையும், மூத்த இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் குஷ்பூ, விஷால், மூத்த இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோர் பாஜகவில் இணைய இருப்பதாக சமூக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதில் குஷ்பூ நேற்று பாஜகவில் இணைந்தார். இதையடுத்து எஸ்ஏ சந்திரசேகரை தொடர்பு கொண்டு, பாஜகவில் இணைய இருப்பதாக வெளியாகி வரும் தகவல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், அந்தத் தகவல் வதந்தி எனவும், அதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கூறினார்.
Comments