கீழடி அகழாய்வின் 5 கட்ட அறிக்கைகளை வெளியிடுவதில் தாமதம் ஏன்- ராமதாஸ் கேள்வி

0 980
கீழடி அகழாய்வின் 5 கட்ட அறிக்கைகளை வெளியிடுவதில் தாமதம் ஏன்- ராமதாஸ் கேள்வி

கீழடி அகழாய்வின் 5 கட்ட அறிக்கைகளை வெளியிடுவதில் தாமதம் ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும், பெருமையையும் உலகத்திற்கு உணர்த்தவிருக்கும் கீழடி அகழாய்வின் பணிகள் 6 கட்டமாக நடைபெற்ற நிலையில், ஒரு கட்ட அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட முதல் 3 கட்ட அகழாய்வுகள் குறித்த அறிக்கை 5 ஆண்டுகளாகியும் கூட வெளியிடப்பட வில்லை என்று குற்றஞ்சாட்டி உள்ள ராமதாஸ், 5 மற்றும் 6 ஆம் கட்ட அகழ்வாய்வு அறிக்கைகளையும் தாமதிக்காமல், விரைந்து வெளியிட மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments