வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடா அருகே கரைகடந்தது
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரைகடந்தது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காலை 6.30 மணியில் இருந்து 7.30 மணிக்குள் கரையைக் கடந்தபோது மணிக்கு 55 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் நேற்று முதலே கனமழை வெளுத்து வாங்குகிறது.
ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியின் ஏனாம் பகுதிகளும் மழைப்பொழிவை பெற்றுள்ளன. தெலுங்கானா, கர்நாடகம், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளிலும் கனமழை பெய்யும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments