ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி மருத்துவத் துறையினருக்கு போடப்பட்டது

0 2358
ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி மருத்துவத் துறையினருக்கு போடப்பட்டது

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி மருத்துவத் துறையினருக்கு போடப்பட்டது.

தலைநகர் மாஸ்கோ அருகில் உள்ள ட்வெர் நகரில் நடந்த நிகழ்வில், அதிகம் பாதிக்கப்படக் கூடிய மருத்துவப் பணியாளர்களுக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டது.

முன்னதாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து போடப்பட்டதாக ட்வெர் பிராந்திய மருத்துவ மருத்துவமனையின் தலைமை மருத்துவர் செர்ஜி கோஸ்லோவ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக இந்தத் தடுப்பூசி 5 ஆயிரம் பேருக்கு போடப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments