கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி

0 2055
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற களமிறங்கிய பெங்களூர் அணிக்கு , தொடக்க வீரர்கள் பின்ச் 47 ரன்களும், தேவ்தத் 32 ரன்களும் சேர்த்து நல்ல தொடக்கத்தை அளித்தனர்.

இறுதி ஓவர்களில் சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசிய டிவிலியர்ஸ் 73 ரன்களை சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி, 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களை குவித்தது.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக, சுப்மன் கில் 34 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments