தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையான ரூ 10,774.98 கோடியை உடனே வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது
இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான 10,774.98 கோடி ரூபாயை உடனே வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 42 ஆவது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. அதில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
2017-18 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தீர்வு நிலுவைத் தொகையான 4,321 கோடி ரூபாயையும் விரைவில் தருவதாக உறுதி அளித்தமைக்கும், சென்ற வாரம் தமிழகத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 1,483.96 கோடி ரூபாய் வழங்கியமைக்கும் ஜெயக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்கினால், பொருளாதாரத்தை புதுப்பிக்க இயலும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments