பொறுப்பற்ற தாயால் இரு சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை..! 25 டூ 75 வரை 7 பேர் கைது

0 44366
பொறுப்பற்ற தாயால் இரு சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை..! 25 டூ 75 வரை 7 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் தந்தையை இழந்த தலித் சிறுமிகள் இருவரை 6 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே சமூகத்தை சேர்ந்த 75 வயது முதியவர் உள்ளிட்ட 7 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் தந்தையை இழந்த சிறுமிகள் இருவர் தாயின் பராமரிப்பில் வசித்து வந்தனர். தாய் சாக்கோ தொழிற்சாலையில் வேலைக்கு சென்ற பின்னர் 13 மற்றும் 12 வயதுடைய அந்த இரு சிறுமிகளும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

அந்த இரு சிறுமிகளும் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு அதே தெருவில் வசிக்கின்ற சிலர் அந்த சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. சம்பவத்தன்று 75 வயதுடைய ஊமையன் என்பவர் போதையில் ஆடைகளின்றி அந்த வீட்டில் இருந்து வெளியே வருவதை கண்ட அந்த கிராமத்து மக்கள் குழந்தைகள் உதவி மையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், அங்கு வருவதற்கு முன்பாக அந்த வீட்டில் தனியாக இருந்த இரு சிறுமிகளையும் அழைத்து அந்த கிராமத்து பெரியவர்கள் விசாரித்த போது அந்த கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 6 மாதமாக அந்த சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

தங்களிடம் அத்துமீறிய நபர்களில் பெயர் தெரிந்த 7 பேரை முதலில் அந்த சிறுமிகள் இருவரும் அடையாளம் காட்டியுள்ளனர். இது குறித்து காவல் துறையினருக்கு குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர் ரஞ்சிதா ப்ரியா எழுத்துப்பூர்வ புகார் அளித்தார்.

அதன் பேரில், 26 வயது சிவா, 45 வயது சண்முகம், 75 வயது ஊமையன், அண்ணன் தம்பிகளான 30 வயது மணிகண்டன், 25 வயது சூர்யா, 31 வயது செந்தமிழ் செல்வம் , 55 வயது வரதராஜன் என்று அந்த பட்டியல் நீண்டுள்ளது. இதுவரை 15 பேரை பிடித்து காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில் முதற்கட்டமாக சிக்கிய இந்த 7 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து தங்கள் வீட்டிற்கு வந்து சென்ற மேலும் சிலரையும் சிறுமிகள் இருவரும் அடையாளம் காட்டி வருவதால் இந்த வழக்கில் சிக்கியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. தனது குழந்தைகள் மீது அக்கறை இல்லாத பொறுப்பற்ற தாயால் இந்த கொடுமை 6 மாதமாக தொடர்ந்ததாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

சிலர் இந்த விவகாரத்தை பஞ்சாயத்து பேசி முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில் குழந்தை பாதுகாப்பு அலுவலர் துணிச்சலுடன் காவல்துறையினரிடம் புகார் அளித்ததால் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாக கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளும் பாதுக்காப்பு கருதி அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

இதில் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளும், கைது செய்யப்பட்ட 7 பேரும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மிரட்டல் விடுத்ததால் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து இரு சிறுமிகளும் 6 மாதமாக வெளியில் சொல்லவில்லை என்றும் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட ஊமையன், வரதராஜன் ஆகிய இருவருக்கும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் வயதில் பேரன் பேத்திகள் உள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments