பாலிவுட் பிரபலங்கள் மீது வீண் அவதூறைப் பரப்புவதாக இரு ஆங்கிலச் செய்திச் சேனல்கள் மீது வழக்கு

0 1330
பாலிவுட் பிரபலங்கள் மீது வீண் அவதூறைப் பரப்புவதாக இரு ஆங்கிலச் செய்திச் சேனல்கள் மீது வழக்கு

போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக பாலிவுட் திரையுலகினரை விமர்சித்த இரு தொலைக்காட்சிகள் மீது திரைப்படத் தயாரிப்பாளர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து பாலிவுட் நடிகர், நடிகைகள் பலருக்குப் போதைப் பொருள் பழக்கம் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில் டிரக்கீஸ், ஸ்கம் என்கிற பெயர்களில் பாலிவுட் திரையுலகைக் கடுமையாக விமர்சித்த ரிபப்ளிக் டிவியின் அர்ணாப் கோஸ்வாமி, பிரதீப் பண்டாரி ஆகியோர் மீதும், டைம்ஸ் நவ் சேனலின் ராகுல் சிவசங்கர், நவிகா குமார் ஆகியோர் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

அதில் பாலிவுட் பிரபலங்கள் மீது வீண் அவதூறைப் பரப்புவதைத் தடுக்கவும், ஊடக விசாரணையின் பெயரில் அவர்களின் தனிமையில் தலையிடுவதைத் தடுக்கவும் கோரியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments