துணியால் ஆன முகக்கவசங்களை வெந்நீரில் சலவை செய்யாமல் பயன்படுத்தினால் தொற்று ஆபத்து - விஞ்ஞானி ரெய்னா மேக்இன்டைர்

0 3588
துணியால் ஆன முகக்கவசங்களை வெந்நீரில் சலவை செய்யாமல் பயன்படுத்தினால் தொற்று ஆபத்து - விஞ்ஞானி ரெய்னா மேக்இன்டைர்

துணியால் ஆன முகக்கவசங்களை தினமும் வெந்நீரில் சோப் போட்டு கழுவி பயன்படுத்தினால் மட்டுமே கொரோனா தொற்று பரவுவதை குறைக்க உதவும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஒருமுறை பயன்படுத்தப்பட்ட துணி முகக்கவசம், சர்ஜிகல் முகக்கவசம் இரண்டுமே மாசுபட்டதாக கருதவேண்டும் என இந்த ஆய்வை நடத்திய  ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ரெய்னா மேக்இன்டைர் தெரிவித்துள்ளார்.

துணியால் ஆன ஒரே முகக்கவசத்தை பல நாட்களுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்த நாம் தூண்டப்படுகிறோம்.  அல்லது அதை கையால் நீரில் கசக்கி போடுகிறோம்.

இந்த செயல்களால் வைரஸ் தொற்று பரவும் ஆபத்து அதிகரிக்கும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாஷிங் மெஷினில் 60 டிகிரி சூட்டில், உரிய சலவை பொடியுடன், துணியிலான முக கவசங்களை சலவை செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளதை இந்த ஆய்வு உறுதிசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments