30 நாளில் நில அளவீடு தவறினால் அதிகாரிகளுக்கு அபராதம்

0 19307
30 நாளில் நில அளவீடு தவறினால் அதிகாரிகளுக்கு அபராதம்

நில அளவீடு அல்லது மறு அளவீட்டுக்கு பணம் செலுத்தியதில் இருந்து 30 நாளில் நில அளவீடு செய்ய தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

நில அளவீடு புகார் தொடர்பாக மதுரை ஆசைத்தம்பி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வாதங்களை கேட்ட நீதிபதி, நில அளவீடு அல்லது மறு அளவீட்டுக்கு பணம் செலுத்தியதில் இருந்து 30 நாளில் நில அளவீடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். தவறினால், செலுத்திய கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் - தாமதத்திற்கு காரணமான
அதிகாரிகளின் சம்பளத்தில் 2 ஆயிரத்து 500 பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

நில அளவீடு அல்லது மறு அளவீடு பணியை முழுமையாக புகைப் படம் மற்றும் வீடியோ பதிவு செய்து, கட்டணம் செலுத்தி கேட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கலாம் என்றும் நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

அரசு நிலம் மற்றும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை கண்டு பிடிக்க, டிரோன் காமிரா தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, நில அளவீடு பணிகளை மேற்கொள்ளுமாறு, தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல் கள் உள்ளடங் கிய சுற்றறிக்கையை ஒரு மாதத்தில் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments