ஊரடங்கு காரணமாக உற்பத்தி குறைந்ததால் தேயிலை விலை கடும் உயர்வு... “டீ” விலை உயரும் அபாயம்?
தேயிலை தூளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், கடைகளில் தேநீரின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக உற்பத்தி குறைந்ததால் தேயிலை நிறுவனங்கள் கணிசமாக விலையை உயர்த்தியுள்ளன. சென்னையில் கிலோ 480 ரூபாய்க்கு விற்பனையான த்ரீ-ரோசஸ் தேயிலை 530 ரூபாய்க்கும், அதே 480 ரூபாய்க்கு விற்பனையான சக்கரா கோல்டு தேயிலை தூள் 516 ரூபாய்கும், 410ரூபாய்க்கு விற்பனையான ஏவிடி கோல்டு 520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதே போல டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் மற்ற பொருட்களான பால், கடலை மாவு, எண்ணெய் போன்றவையும் விலை உயர்வு கண்டுள்ளதால் கடைகளில் தேநீரின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேநீர் கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
வீட்டுப் பயன்பாட்டுக்காக வாங்கப்படும் 50 கிராம், 100 கிராம், கால் கிலோ தேயிலை பேக்கிங்குகளிலும் விலை உயர்ந்துள்ளது.
Comments