மும்பையில் பெரும்பாலான பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தகவல்

0 1261
மும்பையில் பெரும்பாலான பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தகவல்

மும்பையில் பெரும்பாலான பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

கல்வா துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மும்பை முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணிகள் பாதிக்கப்பட்டதுடன், ரயில் போக்குவரத்தும் முடங்கியது.

மும்பைக்கு மின்சாரம் வழங்கும் டாட்டா பவர், பாம்பே எலக்ட்ரிசிட்டி சப்ளை அண்டு டிரான்ஸ்போர்ட் கம்பெனி ஆகியவற்றின் பொறியாளர்கள் கோளாறைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மொத்தம் 2000 மெகாவாட் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், 3 நீர்மின் அலகுகள், டிராம்பே அனல்மின் நிலையம் ஆகியவற்றின் உதவியுடன் 1900 மெகாவாட் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டு விட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments