இரண்டாம் குத்து திரைப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளருக்கு எதிராக புகார் மனு

0 1727
இரண்டாம் குத்து திரைப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளருக்கு எதிராக புகார் மனு

இரண்டாம் குத்து திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வடபழனியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோபிநாத் அளித்த மனுவில், பாலியல் உணர்வுகளை தூண்டும் விதமாக உள்ள இரண்டாம் குத்து திரைப்படத்தின் டீசருக்கு தடை விதிக்க கோரி உள்ளார்.

மேலும், இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் நோக்கோடு டீசர் வெளியிட்டதாக பைவ் ஸ்டார் ஆடியோ யூ டியூப் சேனல் நிர்வாகி, தயாரிப்பாளர் ஹரிபாஸ்கரன் மற்றும் இயக்குனர் சந்தோஷ் குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் மனுவில் கோபிநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டாம் குத்து படத்தின் ஆபாசமான சுவரொட்டிகள் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் இணையவழியில் கல்வி கற்று வரும் நிலையில் இது அதிக பாதிப்பை ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments