தமிழக அரசுக்கு அளித்த விவரங்களையே மத்திய அரசுக்கு கடிதமாக எழுதினேன்... தன்னிச்சையாக கடிதம் எழுதியதாக எழுந்த புகாருக்கு சுரப்பா மறுப்பு

0 2319
தமிழக அரசுக்கு அளித்த விவரங்களையே மத்திய அரசுக்கு கடிதமாக எழுதினேன்... தன்னிச்சையாக கடிதம் எழுதியதாக எழுந்த புகாருக்கு சுரப்பா மறுப்பு

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக, தமிழக அரசுக்கு தான் அளித்த விவரங்களையே மத்திய அரசுக்கு கடிதமாக எழுதியதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார்.

சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, தேவையான நிதியை பல்கலைக்கழகமே திரட்டிக் கொள்ளும் என்று சுரப்பா தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக சர்ச்சை எழுந்த நிலையில், அது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

தமிழக அரசுக்கு தெரியாமல் எந்த விதமான கடிதப் பரிமாற்றத்தையும் தான் மேற்கொள்ளவில்லை என்று அவர் கூறினார். சிறப்பு அந்தஸ்தை ஏற்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஏன் ஏற்கவில்லை என்பது தனக்கு தெரியாது என்றும் சூரப்பா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments