சீனாவின் கிங்டாவோ நகரில் 6 பேருக்கு கொரோனா - நகரம் முழுவதும் பரிசோதனை செய்ய திட்டம்
சீனாவின் கிங்டாவோ நகரில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 5 நாட்களுக்குள் அந்த நகரத்தில் உள்ள சுமார் 94 லட்சம் பேருக்கும் பரிசோதனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
சீனாவில், மற்ற நாடுகளை காட்டிலும் தொற்று பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், துறைமுக நகரமான கிங்டாவோவில் நேற்று 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் முன்கள பணியாளர்கள், நோயாளிகளுக்கு இதுவரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
China to test whole city of 9 million in 5 days as Europe rolls out new virus ruleshttps://t.co/crnpjDyQRw pic.twitter.com/2PiqPM9zhh
— AFP news agency (@AFP) October 12, 2020
Comments