டாட்டா பவர் நிறுவன மின்தொகுப்பில் கோளாறால் மும்பையில் மின்வெட்டு
டாட்டா பவர் நிறுவனத்தின் மின்தொகுப்பில் ஏற்பட்ட கோளாறால் மும்பையில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இதனால் மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகரில் தொழிற்சாலைகள், வீடுகள், ரயில் போக்குவரத்து, தெரு விளக்குகள் எனப் பெரும்பாலான பயன்பாட்டுக்கு டாட்டா பவர் நிறுவனத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது.
இந்த மின்சாரத்தை பாம்பே எலக்ட்ரிசிட்டி சப்ளை அண்டு டிரான்ஸ்போர்ட் கம்பெனி, ரிலையன்ஸ், அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் வெவ்வேறு பகுதிகளில் நுகர்வோருக்குப் பகிர்ந்தளிக்கின்றன.
இந்நிலையில் டாட்டா பவர் மின்வழங்கல் தொகுப்பில் ஏற்பட்ட கோளாறால் மும்பையில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே மண்டலங்களில் மின்பாதைகளில் மின்சாரம் இல்லாததால் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
At 10.10 am there were simultaneous substation tripping in MSETCL's Kalwa, Kharghar causing a huge dip in frequency in Mumbai transmission system which led to tripping of power supply. Restoration work in progress to bring supply from the 3 Hydro units & Trombay units: Tata Power pic.twitter.com/kEat3e7I04
— ANI (@ANI) October 12, 2020
Comments