ஜிஎஸ்டி நிலுவையில் ரூ.18,000 கோடியை வாங்கி உள்ளோம் - அமைச்சர் ஜெயக்குமார்
ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகை நிலுவையில் 18 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் இருந்து வாங்கி உள்ளதாக, அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க செல்லும் முன் சென்னை பட்டினப்பாக்கத்தில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மாநில அரசுகள் கடன் பெறும் திட்டத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும் என திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் கூறியது பற்றி பதில் அளித்த அமைச்சர், போகாத ஊருக்கு வழிதேடுவதுதான் திமுகவின் செயல் என்றார்.
அமெரிக்காவில் இருந்து வந்த பழனிவேல் தியாகராஜனுக்கு இந்திய பொருளாதாரம் தெரிய வாய்ப்பில்லை என்றும் அவர் விமர்சித்தார். ஜி.எஸ்.டி இழப்பீட்டை தரக்கோரி இன்றைய கூட்டத்திலும் வலியுறுத்த உள்ளதாக ஜெயக்குமார் கூறினார்.
ஜிஎஸ்டி நிலுவையில் ரூ.18,000 கோடியை வாங்கி உள்ளோம் - அமைச்சர் ஜெயக்குமார் #GSTCouncil | #MinisterJayakumar https://t.co/HDmu0zKJnU
— Polimer News (@polimernews) October 12, 2020
Comments