சுஷாந்த் சிங் வழக்கில் தனக்கு எதிராக பொய்யான தகவல்களை அளித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை - நடிகை ரியா திட்டம்

0 1167
சுஷாந்த் சிங் வழக்கில் தனக்கு எதிராக பொய்யான தகவல்களை அளித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை - நடிகை ரியா திட்டம்

சுஷாந்த் சிங் வழக்கில் தனக்கு எதிராக பொய்யான தகவல்களை அளித்தவர்கள் மீது நடிகை ரியா சக்ரவர்த்தி சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே தெரிவித்துள்ளார்.

ரியா சக்ரவர்த்திக்கு கடந்த 8 ஆம் தேதி நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், அவருக்கு எதிராக அவதூறு பரவிப்பியவர்கள், வாழ்க்கை மற்றும் மன உறுதியை அழிக்க முயன்றவர்களின் பின்புலத்தை ஆராய உள்ளதாக அவரின் வழக்கறிஞர் சதீஷ் குறிப்பிட்டுள்ளர்.

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக கட்டுக்கதைகள் மற்றும் தவறான செய்திகளை ஊடகங்களில் அளித்தவர்களின் பட்டியலை சேகரித்து சிபிஐக்கு அனுப்ப உள்ளதாகவும், விசாரணையை தவறாக வழிநடத்தியதற்கு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடங்க சிபிஐயிடம் கோர உள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments