மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்கிறது
மேற்கு மத்திய வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு 4 கிலோமீட்டர் வேகத்தில் ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வுத்துறையின் அறிக்கையில், இது மேலும் தீவிரமடைந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையாக மாறும் என்றும், நாளை காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதன் விளைவாகக் கடலோர ஆந்திரம், தெலங்கானா, ராயலசீமா, கர்நாடகத்தின் பல இடங்களில் லேசான மற்றும் மிதமான மழையும் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
Depression over Westcentral Bay of Bengal lay centered about 280 km southeast of Vishakhapatnam at 8:30 IST today. It is very likely to cross north Andhra Pradesh coast between Narsapur & Visakhapatnam during the early morning of 13th October: India Meteorological Department pic.twitter.com/j6IS3dH1nG
— ANI (@ANI) October 12, 2020
Comments