கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேருவதற்கான 2-ம் கட்ட விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் தொடங்கியது

0 2167
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேருவதற்கான 2-ம் கட்ட விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் தொடங்கியது

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேருவதற்கான 2-ம் கட்ட ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 1லட்சத்து 15ஆயிரத்து 771 இடங்கள் உள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவில், 60ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில், எஞ்சிய 55,000 இடங்களை நிரப்புவதற்கான 2-ம் கட்ட ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது. ஏற்கனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் உட்பட கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர விரும்புவர்கள் rte.tnschools.gov.in இணையதளம் வாயிலாக வரும் நவம்பர் 7 -ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான இடங்கள் நவம்பர் 12-ம் தேதி ஒதுக்கப்படும் என்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments