ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்

0 889
ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தார்.

மேலும் மாலையில் டெக்வார் என்ற இடத்திலும், காரி கர்மாராவிலும் மீண்டும் தாக்குதல் நடத்தியதாகவும் அதற்கு இந்தியத் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அக்டோபர் முதல் ஆறு நாட்களில் 62 போர்நிறுத்த மீறல்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments