லிபியாவில் கடத்தப்பட்ட ஏழு இந்தியர்கள் விடுவிப்பு

0 860
லிபியாவில் கடத்தப்பட்ட ஏழு இந்தியர்கள் விடுவிப்பு

லிபியாவில் கடத்தப்பட்ட ஏழு இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஏழு பேரும் ஆந்திரா, பீகார், குஜராத் மாநிலங்களை சேர்ந்தவர்கள் .கடந்த மாதம் இறுதியில் இந்த ஏழு பேரும் தாங்கள் பணிபுரியும் கட்டுமான நிறுவனத்தில் இருந்து இந்தியா திரும்புவதற்கான விமான நிலையம் செல்லும் வழியில் கடத்தப்பட்டனர்.

அவர்களை விடுவிப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சகம் கடத்தப்பட்ட ஏழு இந்தியர்களின புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஏழு பேரும் மீட்கப்பட்டதாக துனிசியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments