கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு மார்ச் மாதம் வரை தண்ணீர் திறந்து விட ஆந்திர அரசு திட்டம்
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு மார்ச் மாதம் வரை தண்ணீர் திறந்து விட ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஆந்திர மாநில தெலுங்கு கங்கை திட்ட பொறியாளர்கள், கண்டலேறு அணையின் சேமிப்பு, வரும் வாரங்களில் முழு கொள்ளளவான 68 டி.எம்.சி.யை எட்டக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
இதில் 8 டி.எம்.சி. தண்ணீரை திருப்பதி மற்றும் சென்னை குடிநீர் தேவைக்காக திறந்துவிட முடிவு செய்திருப்பதாகக் கூறிய அவர்கள், தற்போதைய நிலையைப் பொறுத்து அடுத்த ஆண்டு மார்ச் வரை தொடர்ந்து தண்ணீர் திறக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் நடப்பு ஆண்டு முழு அளவிலான கிருஷ்ணா நீரை தமிழகம் பெறும் என்று எதிர்பார்க்கலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
Comments