ஹத்ராஸ் பெண் கொல்லப்பட்ட சம்பவம் - பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இன்று உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

0 1087
ஹத்ராஸ் பெண் கொல்லப்பட்ட சம்பவம் - பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இன்று உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம் பெண் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் இன்று ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

அவர்கள் இன்று அதிகாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்கள் சொந்த கிராமத்தில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

போலீசார் தங்கள் மகளின் உடலைக்கூட காட்டாமல் இறுதிச்சடங்கு செய்ததாகவும் தங்களை மிரட்டி வருவதாகவும் அந்த குடும்பத்தினர் புகார் தெரிவித்ததையடுத்து அவர்களை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தில் இன்று அவர்கள் வாக்குமூலம் அளிக்க உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments