ஐ.பி.எல். சூதாட்டம்... லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்
தமிழகத்தில் கோவை மற்றும பல்வேறு மாநிலங்களில் ஐபிஎல் போட்டிகளை முன்வைத்து சூதாட்டம் நடத்தியவர்களை போலீசார் அதிரடி சோதனை மூலம் கைது செய்துள்ளனர். இந்த சோதனையில் பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை அருகே ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர் - அவர்களிடமிருந்து 3200 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
அபுதாபியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதிய போட்டியை வைத்து கோவை அருகே ஆலாந்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில் ஒரு கடையில் டி.வி.யில் ஐ.பி.எல். கிரிக்கெட் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது.
அதை பார்த்துக் கொண்டு இருந்த 4 பேர் எந்த அணி வெற்றி பெறும் என பணம் பந்தயம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.அவர்கள் 4 பேரையும் சுற்றிவளைத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.
ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் 18 பேரும், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து 17 செல்போன்களும் லட்சக்கணக்கில் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரிலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.டெல்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக சோதனைகள் நடைபெற்றன.
Comments