ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி

0 1775
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி

டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய மும்பை அணியின் டிகாக், சூர்யகுமார் யாதவ் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தலா 53 ரன்கள் எடுத்தனர்.

19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments