போர் நிறுத்தம் செய்யப்பட்ட பிறகும் ஏவுகணைகளால் தாக்கியதாக ஆர்மீனியா மீது அஸர்பைஜான் புகார்
போர் நிறுத்தம் செய்யப்பட்ட பிறகு ஆர்மீனியா தங்கள் பகுதியில் குண்டு வீசி தாக்கியதாக அஸர்பைஜான் குற்றஞ்சாட்டியுள்ளது.
நாகோர்னோ-கராபக் எல்லை தொடர்பாக போர் நடந்து வந்த நிலையில், ரஷ்யாவின் தலையீடு காரணமாக போர்நிறுத்தம் ஏற்பட்டது.
இந்நிலையில் தனது 2வது பெரிய நகரமான காஞ்சாவில் ஒரு குடியிருப்புப் பகுதியை நோக்கி ஆர்மீனியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அஸர்பைஜான் குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும் 34 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments