5 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

0 3011
துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

26 - வது லீக் போட்டியில் " டாஸ்" வென்ற சன் ரைசர்ஸ் அணி, முதலில், பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சன் ரைசர்ஸ் அணி, 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, களமிறங்கிய ராஜஸ் தான் ராயல்ஸ் அணி, ஆட்ட நேர முடிவில், ஒரு பந்து மீதி இருந்த நிலையில், 163 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ராகுல் திவாதியா 45 ரன்களும், ரியான் பராக் 42 ரன்களும் எடுத்தனர். சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கலீல் அகமது மற்றும் ரஷீத் கான் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல் புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments