தரையில் கிடந்த வெடிமருந்து உருண்டையைக் கடித்த நாய் பரிதாப பலி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே தரையில் கிடந்த வெடி மருந்து உருண்டையைக் கடித்த வேட்டை நாய் பரிதாபமாக உயிரிழந்தது.
விளாத்திக்குளம் பகுதியில் முயல், நரி மற்றும் மான்களை வெடிமருந்தினை பயன்படுத்தி சில கும்பல்கள் வேட்டையாடி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கூத்தலூரணி கிராமத்தில் வேட்டை நாய் ஒன்று, தரையில் கிடந்த வெடி மருந்து உருண்டையைக் கடித்துள்ளது. இதில் அந்த நாய் முகம் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானது.
Comments