ரயில்வே போக்குவரத்தை அதிவேக திறன் உடையதாக மாற்ற சில முக்கிய நடவடிக்கைகள் - மத்திய அரசு
ரயில்வே போக்குவரத்தை அதிவேக திறன் உடையதாக மாற்ற சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி முக்கிய ரயில்வே தடங்கள் 130 முதல் 160 கிலோமீட்டர் வேகத்தை தாங்கும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளன.
இந்த வேகத்தில் செல்லும் டிரெயின்களில் நான்-ஏசி பெட்டிகள் மாற்றப்பட்டு ஏசி பெட்டிகள் பொருத்தப்படும். முதல் கட்டமாக டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா வழித்தடங்கள் மேம்படுத்தப்படும்.
அதே போன்று 72 படுக்கைகள் உள்ள பெட்டிகளுக்கு பதிலாக 83 படுக்கைவசதிகள் உள்ள பெட்டிகள் தயாராகி வருகின்றன. இந்த ஆண்டு இது போன்ற 100 பெட்டிகளும், அடுத்த ஆண்டு 200 பெட்டிகளும் தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
110 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறைவான டிரெய்ன்களில் மட்டுமே இனி நான் ஏசி பெட்டிகள் இணைக்கப்படும்.
Comments